சம்பள உயர்வு கோரி ஆசிரியர் − அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும்(Mahinda Rajapaksa) இடையில் இன்று (11) நடைபெறவிருந்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பிரதமர் அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமருடன் கலந்துரையாடல் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்தார்.
இதன்படி, அதிபர் − ஆசிரியர் போராட்டம் 91வது நாளாக தொடர்கின்றது எனவும் அவர் தெரிவித்தார் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், தமது சம்பள முரண்பாடு பிரச்சினை இதுவரை முடிவடையவில்லை என ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments