Advertisement

Responsive Advertisement

பெண்கள் மார்பகப் புற்று நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! வைத்தியர் எச்சரிக்கை


மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன (Janaki Vidanapathirana) தெரிவித்துள்ளார்.

தற்போது மார்பகப் புற்றுநோயினால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் வருடத்திற்கு 4,500இற்கும் அதிகமானோர் மார்பக புற்றுநோய் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தினை உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வெளியிட்ப்பட்ட அறிக்கை ஒன்றை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ (Ranjith Paduvanthudava) சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளை விட தற்போது தற்போது மார்பகப் புற்றுநோயினால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments