இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசியை மூன்றாவது டோஸாக பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்காக 14.5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 Comments