களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று ஐ.சீ.யூ பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் அவர்கள் தெரிவித்தார்.
ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் அனத்தும் வைத்திய அத்தியட்சகர் தலமையில் இன்று நடைபெற்றது.
இதன் போது பொது வைத்திய நிபுணர்கள்ää மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள்,தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டதனை அவதானிக்கக கூடியாதாக இருந்தது.
மேற்படி தீவிர சிகிச்சை பிரிவானது கொரணா நோயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அனர்த்த சூழ் நிலையில் எமது பிரதேச மக்களின் மேற் கொண்ட பற்றுதல் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகரின் அயராத முயற்சியினால் இச் சிகிச்சை பிரிவு அமைய பெற்றுள்ளது. அவருக்கு எமது பாராட்டுக்கள்.மேலாக இப்பிரிவில் தங்களது உயிரை துச்சமென நினைத்து சேவையாற்ற முன்வந்திருக்கும். வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள்,தாதிய உத்தியோகத்தர்கள் அனைவரையும் பாராட்டுவதோடு அவர்களுக்கு எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்பாடாதிருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்......
0 Comments