Advertisement

Responsive Advertisement

கொரோனாவுக்கு பின் நுரையீரல் பாதிப்பு!

 


கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்ட பின்னரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளின் சுவாச நிபுணர் டொக்டர் துஷார கலபட தெரிவித்தார்.


கொரோனா அறிகுறிகள் உருவாகிய மக்களில் 5 முதல் 10 சதவீதம் பேர் நிரந்தர நுரையீரல் பாதிப்பைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய் குணமான சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு மற்றும் உடல் வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபக மறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் அறிகுறிகள் நீடித்தால், வைத்தியசாலையின் சுவாச பிரிவிலும், மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கிளினிக்கிலோ சிகிச்சை பெறுவது பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments