Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அழைத்து தாக்கிய பொலிஸார் - மட்டக்களப்பில் கடும்பஸ்தர் படுகாயம்


 மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட குடும்பஸ்தர் மீதே மட்டக்களப்பு பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஜோ .மதன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தனக்கு நடந்த சம்பவம் இனிமேல் யாருக்கும் நடக்கக் கூடாது எனவும் பொலிஸாரின் இந்த காட்டு மிராண்டித்தனம் உடனடியாக நிறுத்தப் படவேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் 

Post a Comment

0 Comments