Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் சதோச விற்பனை நிலைய திறப்பு விழா!!

 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், சதோச வர்த்தக நிலையத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசிய தேவைக்கான பொருட்களையும் நிவாரண விலையில் வழங்கிவருகின்றனர்.


அதற்கு அமைவாக மட்டக்களப்பு நகர் பகுதி மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று நாளை (09) திறந்துவைக்கப்படவுள்ளது.

வாணிக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சதோச திறக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நிவாரண விலையில் பெற்றுக்கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் சதோச விற்பனை நிலையமானது மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் நாளை திறந்துவைக்கப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு நகர் பகுதி மக்களுக்கு சத்தோச விற்பனை நிலையம் இல்லாதிருந்த நீண்டகாலமாக குறை இதனூடாக தீர்த்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments