மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்குக்கிழமையன்று இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிஸாரினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிறப்பு நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிக் கெண்டிருந்த இரு சகோதரர்களை இடைமறித்த பொலிஸார் தமது துப்பாக்கியால் சராமாரியா முகத்தில் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
தினேஷ் (இலக்கம் 8656) எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை மட்டக்களப்பு கொககுவில் பகுதியிலும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments