மட்டக்களப்பிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்வதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார்.
மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுமத்தியிருந்த நிலையில் அவர் இந்த சவாலினை விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மெதடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் தாம் தனது கருத்துக்களை முன்வைக்கின்றென்.
நாட்டின் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கமைய நாட்டின் வளங்களை எந்த வகையிலும் சட்டவிரோதமாக வெளியிடவோ, விற்கவோ அல்லது கடத்துவதற்கோ முடியாது.
ஒரு தீவை உருவாக்க வேண்டுமானால் எவ்வளவு மணலின் அளவு தேவை என்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
அப்படியானால், கப்பல்கள் மூலமே நாட்டிற்கு வெளியே மணல் அனுப்பப்பட வேண்டும், நாட்டின் சட்டங்களின் கீழ் சட்டவிரோதமாக அவ்வாறு செய்ய முடியாது.
நமது கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமானால், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மாலைதீவில் நீர் வடிகட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடந்த பருவத்தில் ஆறரை க்யூப் மணல் அனுப்பப்பட்டதை அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தினார்.
இது ஒரு இலங்கை நிறுவனத்தால் அனுப்பப்பட்டது. இதற்கான அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டுள்ளன என்றார்.
நம் நாட்டின் கனிம வளங்கள் நிறுவனம் ஒன்றினால் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதிலிருந்து நாடு வருவாயைப் பெறுகிறது.
எந்த சூழ்நிலையிலும் நம் நாட்டிலிருந்து மணலை ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற மோசடி எதுவும் நடக்கவில்லை என்று நான் பொறுப்புடன் கூறுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments