Advertisement

Responsive Advertisement

ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை வெளிவரவுள்ள முக்கிய அறிவிப்பு

 


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுமா என்பது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படுமென எதிர்பாரக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி நாளை கூடவுள்ளது. இந்த கூட்டத்திலேயே, தீர்மானம்l எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 20ம் திகதி முதல் கடந்த மாதம் 30ம் திகதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனினும், கொவிட் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், 30ம் திகதி முதல் 6ம் திகதி வரை அந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டது. அந்த நிலையிலும், கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், ஊரடங்கு எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க ஜனாதிபதி தலைமையிலான கொவிட்-19 தடுப்பு செயலணி தீர்மானித்தது.

கொரோனா மரணங்கள் 200ஐ தாண்டி கடந்த காலங்களில் பதிவாகியிருந்ததுடன், கடந்த ஓரிரு தினங்களாக அந்த எண்ணிக்கை 185 வரை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில், கடந்த வார அறிக்கைகளை ஆராய்ந்து, நாளைய தினம் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எட்டப்படும் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன

Post a Comment

0 Comments