நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோரை, எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த ஹிஷாலினி ஜுட் குமார் என்ற சிறுமி, தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளிலேயே, சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் மைத்துனன் மற்றும் இடைதரகர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments