Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- வெல்லாவெளியில் நள்ளிரவில் கிரமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்- பெருமளவிலான பயிர்களை தாக்கி அழித்தன...!!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் இன்று புதகிழமை(01) அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 காட்டு யானைகளால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்படதாகவும், அக்கிராமத்தில் மக்களால் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, மா, பலா போன்ற பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை(31) இரவு 8 மணியளவில் அக்கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அங்கிருந்து பயிர்களை துவம்சம் செய்த வேளை மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், இரவு 11 மணியளவில் கிராமத்தை விட்டு யானைகளை துரத்தியுள்ளனர்.

பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் மீண்டும் அக்கிராமத்திற்குள் புகுந்த அதே காட்டுயானைகள் அங்கு மக்களால் அவர்களது வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மரவெள்ளி தென்னை, மா, மற்றும் பலா போன்ற பயிர்களை முற்றாக அழித்து துவம்சம் செய்துவிட்டு அதிகாலை 5 மணியளவில் கிராமத்தை விட்டு நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த யானைகள் அக்கிராமத்தின் மலைகள் நிறைந்த காட்டப்பகுதியினுள் காணப்படுவதையும், அக்கிராம பொது மக்கள் வெடிகளை எறிந்து சத்தம் இட்டு கலைப்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும் யானைகள் இரண்டும் அக்காட்டுப்பகுதியிலேயே மாறி மாறி நிற்பதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Post a Comment

0 Comments