இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் 15ஆம் திகதி 13000 மில்லியன் ரூபா நோட்டுக்களை அச்சிட்டிருப்பதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா இவ்வாறு அச்சிடப்பட்டிருக்கின்றது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி 1.377 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டிருந்ததோடு இதுவரை 1.5560 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டிருப்பதாக பதிவுகள் கூறுகின்றன.
மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் நேற்று முன்தினமே பதவியேற்ற நிலையில் இவ்வாறு அதிகப் பணம் அச்சிடப்பட்டிருப்பது பொருளாதாரத்தை நேரடியாகவே தாக்கவல்லது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
0 Comments