Home » » T- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியது...!!

T- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியது...!!

 


இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன.


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 7-வது 20 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் திகதி முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளன.

துபாயில் வரும் அக்டோபர் 24-ம்  திகதி இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

முதல் அரையிறுதி போட்டி அபுதாபியில் நவம்பர் 10-ம் திகதியும், 2-வது அரையிறுதி துபாயில் 11-ம் திகதியும் நடக்கிறது, இறுதிப் போட்டி நவம்பர் 14-ம் திகதி துபாயில் நடக்கிறது.

குரூப்-2 பிரிவி்ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே மோதுகின்றன. அக்டோபர் 24-ம் திகதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 2-வது போட்டியில் அக்டோபர் 31-ம் திகதி நியூஸிலாந்துடன் மோதுகிறது இது துபாயில் நடக்கிறது.

நவம்பர் 3-ம் திகதி அபுதாபியில் நடக்கும் 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

நவம்பர் 5-ம் திகதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8-ம் திகதி ஏ பிரிவில் 2-ம் இடம் பெற்ற அணியுடனும் மோதுகிறது.

நவம்பர் 8 இந்தியா ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் மோதுகிறது-துபாய்

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். இந்த தகுதி சுற்றில் வங்காளதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் விளையாட தகுதி பெரும்.

முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது

குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |