Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பறிபோகவுள்ள பவித்திரா வன்னியாராச்சியின் பதவி? அடுத்து யார்? வெளியான தகவல்!

 


ஸ்ரீலங்காவில் மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்க அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அப்பதவியில் இருக்கும் பவித்ரா வன்னியாராச்சி தனது சுகாதார அமைச்சர் பதவியை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் அரச வட்டாரங்களை மேற்கோள்க்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவைதாவது, 

சுகாதார அமைச்சர் என்ற முறையில், கொவிட் தொற்று நோய்க்குத் தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த, பவித்ரா வன்னியாராச்சி திறமையற்றவர் என்பதை அரச அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments