Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மயானங்களில் கடும் நெருக்கடி -வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் சடலங்கள்

 


மயானங்களில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்திய சாலைகளில் இரண்டு மற்றும் மூன்று நாட்களாக குவிந்து கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசியல் தலைமையின் கீழ் பொலிஸார் தலையிட்டு குறித்த சடலங்களுக்கு இறுதி கிரியைகளைச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சடலங்களைத் தகனம் செய்ய குறித்த பிரதேசங்களில் அமைந்துள்ள மயானங்களில் இடம் இல்லை எனவும் அந்த மயானங்களில் கொரோனாவால் உயிரிழப்போர்களின் சடலங்கள் மாத்திரமன்றி, சாதாரணமாக உயிரிழப்போர்களின் உடல்களும் தகனம் செய்யப்படுவதாகவும் இதனால் நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு மற்றும் மூன்று நாட்களாக வைத்தியசாலைகளில் சடலங் களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் இன்றும் மற்றும் நாளையும் சடலங்களைத் தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Post a Comment

0 Comments