Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேத்தாத்தீவில் வீதியில் வீழ்ந்து கிடந்தவருக்கு அருகில் செல்லவோ வைத்தியசாலையில் கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை ! வைத்தியசாலையில் உயிரிழப்பு !

 


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாத்தீவு கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு அருகில் செல்லவோ அவரை வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லவோ யாரும் முன் வரவில்லை.

இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பது தொடர்பில் தகவல் அறிந்த களுவாஞ்சிகுடி பொலிசாரும், அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தரும், ஸ்த்தலத்திற்கு விரைந்து அங்கு வீழ்ந்து கிடப்பவரை அவதானித்துள்ளனர்.

பின்னர் வீழ்ந்து கிடந்தவரை பொலிசாரும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு பொலிசாரால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் செலுத்திச் சென்றதாகக் கருதப்படும் துவிச்சக்கர வண்டியை மீட்டு பொலிசார் எடுத்துச் சென்றுள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர், ஊர் என்பன இதுவரையில் அடையாளம் காணப்படவிலலை எனவும், இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments