Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனாவின் மற்றுமொரு புதிய விகாரம் கண்டுபிடிப்பு




டெல்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் பிரிவு மேற்கொண்ட பரிசோதனைகளில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்டா திரிபின் மூன்று பிறழ்வுகளும் அடையாளம் காணப்பட்ட ஒரே நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments