Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெரியகல்லாறு இலங்கை வங்கி தற்காலிகமாக பூட்டு

 


பெரியகல்லாறு இலங்கை வங்கியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை பரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் வங்கி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.


பெரியகல்லாறு கிராமத்திலுள்ள இலங்கைவங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் 15 பேருக்கு எழுமாற்றாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் இலங்கை வங்கியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இவ் வங்கியில் கடமை புரியும் கல்முனையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானதுடன் இன்று மேலும் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, பெரியகல்லாற்றில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கடமை பரியும் முகாமையாளர் ஒருவர் கடந்தவாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து குறித்த வங்கியின் நடவடிக்கைகளும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments