Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு...!!!


 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டன் பிரதேசத்தில் கும்பிளமடு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டு டொன்று இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.


பொலிசாரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருடன் திராய்மடு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியில் குறித்த 81 மில்லிமீட்டர் மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

திலிப் யூட் என்பவருக்கு சொந்தமான தனிப்பட்ட காணிக்குள் இருந்தே இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments