இன்று அல்லது நாளை நாடு முடக்கம்..?
இன்று அல்லது நாளை முதல் நாடு முழுமையாகவோ அல்லது மாகாண ரீதியாகவோ முடக்குவது தொடர்பில் உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து டெல்ட்டா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என சுகாதார தரப்பிலிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் நிலைமை மிகவும் பாரதூரமாக மாறக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு,
கொரோனா வைரஸ் பரவலானது தற்போது இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் நாடு முழுவதுமாகவோ அல்லது மாகாண ரீதியாகவோ முடக்குவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறாயினும், இன்றோ அல்லது நாளையோ இலங்கையில் மீண்டும் பொது முடக்கம் தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments