Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐந்து மாத சிசுவையும் கொன்றது கொரோனா

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணின் ஐந்து மாதக் சிசுவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


கம்பளையைச் சேர்ந்த அந்தப் பெண், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன்போது, அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணமடைந்த சிசுவின் தகனம் தகனம் இன்று மாலை கம்பளை மயானத்தில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments