Advertisement

Responsive Advertisement

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

 தற்போது நடைமுறையில் ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்று பரவலை நாட்டை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலகின் அனைத்து நாடுகளும் இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்


காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா என்பது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்

Post a Comment

0 Comments