Advertisement

Responsive Advertisement

அவசர நோயாளிகளுக்கு மாத்திரமே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

 


நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பிலும் அதிக தொற்றாளர்கள் அடையாலம் காணப்பட்டு வருகிறனர் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளார் கலாரஞ்சனி கணேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

PCR பரிசோதனைகளின் அடிப்படையில் 35% பரிசோதனைகள் நேர்மறையாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக அதிகமான தொற்று நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஏற்கனவே 6 வைத்திய விடுதிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாவற்க்காடு வைத்தியசாலையும் எமது வைத்தியசாலையுடன் இணைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவுள்ளோம்.

மேலதித கட்டில்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை, பொறுத்தவரையில் ஒட்சிசன் தட்டுப்பாடு இன்னும் ஏற்படவில்லை.

எனினும் 16ம் திகதியில் இருந்து அவசரமானதும் அவசியமானதுமானதும் அத்தியாவசியமான நோயாளிகளை மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையில் அனுமதி அட்டை இருக்கும் ஒருவருக்கு மாத்திரமே நோயாளியுடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

கிளினிக் நோயாளர்கள் தொலைபேசி மற்றும் தபால்மூலம் தங்களது மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தயவுசெய்து பொதுமக்கள் இந்த நடைமுறையை பேணுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments