Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது – ஜீவந்தர

 


கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிரத்தைக் காட்டும் வரைபை இணைத்துள்ள அவர், ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறியப்பட்டிருந்ததுடன், 19.3 சதவீதமானோரிடையே டெல்டா திரிபு கண்டறிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் ஜூலை 31 ஆம் திகதியாகும்போது, இந்த நிலைமை மாற்றமடைந்து, கொழும்பில் கொவிட் தொற்று உறுதியான 90 சதவீதத்துக்கு அதிகமானோரின் மாதிரிகளில் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியதொரு பாரதூரமான நிலைமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments