Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

 


முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி,

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இதனால் வீட்டிலிருந்து வெளியே வரும் போது முகக்கவசமின்றி வர வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டார்.

Post a Comment

0 Comments