Home » » 10 நாட்களில் நாட்டை திறக்க முடியுமா? “பதிலளிக்க முடியாது” என வைத்திய நிபுணர் தெரிவிப்பு

10 நாட்களில் நாட்டை திறக்க முடியுமா? “பதிலளிக்க முடியாது” என வைத்திய நிபுணர் தெரிவிப்பு

 


நாட்டை 10 நாட்களில் திறக்க முடியுமா என்பது தொடர்பில் பதிலளிக்க முடியாது என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,.

நாட்டை எதிர்வரும் 10 நாட்களில் திறக்க முடியுமா என்பது தொடர்பில் பதிலளிக்க முடியாது. பரந்த ஆய்வின் பின்னரே இதற்கான பதிலை அளிக்க முடியும்.

சுகாதார அமைச்சு இந்த விடயத்தை எவ்வாறு கையாள வேண்டுமென்ற வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. எமது ஆலோசனைகளையும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்.

விஞ்ஞானப்பூர்வமாகவும் ஒரு முறைமையின் கீழும் நாட்டை மீண்டும் திறக்க வர்த்தக சங்கங்கள் விரும்புகின்றன என்றார். 

இதேவேளை, கடந்தவாரம் முதல் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 100 சதவீதம் கடைப்பிடித்து உங்களையும் உங்களை சார்ந்துள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

கொரோனா நோய் அறிகுறிகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |