சத்துருகொண்டான் விவசாய பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் 49 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் இருந்து கடந்த வாரம் சத்துருக்கொண்டான் விவசாய பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட 09 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் கடந்த நான்கு நாட்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தும் உள்ளதாகவும் பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பிராந்தியத்தில் பொதுமக்கள் அனைவரும் இறுக்கமான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் பிராந்திய சுகாதாரப்பணிமனைக்கு வருகை தந்துதடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப்பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையின் சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.,ராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் வழிகாட்டலில் பிராந்தியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
0 Comments