Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- ஏறாவூரில் சேதனப் பசளை வளமாக்கித் தயாரிப்பு உபகரணத் தொகுதி விநியோகம்...!!

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அலுவலகங்களில் உள்ள தோட்டங்களில் சேதன வளமாக்கிகளைத் தயாரிப்பதற்காக விவசாயத் திணைக்களத்தினால் உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டு

வருகிறது.


ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நிறுனங்களான பொதுச் சுகாதாரப் பணிமனை மற்றும் ஏறாவூர் நகர சபை ஆகியவற்றுக்கு சேதன வளமாக்கிகளைத் தயாரிக்கும் உபகரணத் தொகுதிகள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

சேதன வளமாக்கிப் பாவனையை ஊக்குவிக்கும் பொருட்டு மாகாண விசேட அபிவிருத்தி மானியத் திட்டத்தின் கீழ் சுமார் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த உபகரணத் தொகுதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட்டின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த உபகரணக் கையளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் உள்ளிட்டோரும் பயனாளி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments