Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தினால் டயகம சிறுமியின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

 


மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தினர் அண்மையில் தலவாக்கலை டயகம 3ஆம் பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தினை கண்டித்தும், சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்ப்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று(21)புதன்கிழமை காலை 10.00 மணியளவில் முன்னெடுத்தனர்.


இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் ஒரு சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியுள்ளமை, அத்தோடு அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆகியவற்றை வண்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .

அத்துடன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை, மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி மாணிக்கம்மாஅவர்களின் முன்னெடுப்பில் மட்டக்களப்பில் உள்ள வீட்டுவேலை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments