Advertisement

Responsive Advertisement

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்!

 


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியை தனியார் மயப்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, கல்வியில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்களது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments