Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பம்- முதல்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு...!!

 


பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இது ஆரம்ப கட்டமாகும். சுகாதார பிரிவின் பூரண வழிகாட்டல்களைப் பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்விஅமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது எனவும் கல்வி அமைச்சர் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் 1439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக் கொண்ட 1523 பாடசாலைகளுமாக 2962 பாடசாலைகளை முதல் கட்டமாக ஜுலை மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments