Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...!!




மட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பிரதேசத்தின் திருச்செந்தூர் 8ஆம் வட்டார பகுதியில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்குமிடையில் வாய்த்தகர்க்கம் எழுந்துள்ள நிலையில் பெண்ணினை அவதூறாக பேசியதை அவதானித்த அங்கு நின்றிருந்த பெண்ணின் கணவன் அதனை தடுக்க முனைந்த நிலையில் மதுபோதையில் காணப்பட்ட அதே வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய செரன் அவுஸ்கோன்(சுரேன்) எனும் நபர் கையில் இருந்த சிறு கைக்கத்தியால் மூன்று தடவைகள் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்காகிய 43 வயதுடைய ரகுபதி உதயகுமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தி குத்தினை நடத்திவிட்டு தப்பி சென்ற நபரை தேடும் பணியினை காத்தான்குடி பிரதேச பொலிஸார் வலைவீசி தேடிக்கொண்டு இருப்பதுடன் பொது மக்களும் தேடுதல் பணியினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments