(எஸ்.எம்.எம்.முர்ஷித்)ஏறாவூர் பெண் சந்தை வீதியில் 37 வயதுடைய பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இன்று (திங்கள்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதை வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புலனாய்பவு பிரிவினரும் ஏறாவூர் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 08 கிராமும் 120 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் போதைப் பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் பிரபல போதைவஸ்து வியாபாரி என்றும் குறித்த சந்தேக நபருக்கு ஏற்கனவே போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றில் உள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறிந்த நபரே ஓட்டமாவடி , வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை பிரதேசங்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை வினியோகிப்பவர் என தெரிய வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
0 Comments