Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாகாணங்களுக்கு இடையேயான பயண தடை - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

 


மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அத்தியாவசிய சேவை மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சித்தமைக்காக 900 க்கும் மேற்பட்டோர் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பொலிஸார் தொடர்ந்து வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று, 413 வாகனங்களில் 928 பேர் பயணத் தடையை மீற முயற்சித்ததாகவும், அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி விடப்பட்டதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.  

Post a Comment

0 Comments