Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சீனாவில் இருந்து ஆரம்பிக்கும் மற்றுமொரு நோய்தொற்று!

 


H10N3 என்ற பறவை காய்ச்சலின் முதல் மனித தொற்று சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கும் 41 வயதான நபருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் ஏப்ரல் 23 ஆம் திகதி H10N3 தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியதாகவும், ஏப்ரல் 28 ஆம் திகதி அவரது உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சீனவின் சுகாதார ஆணையகம் ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளது.

அதன் பின்னர் மே 28 அன்று அவருக்கு H10N3 திரிபு இருப்பது கண்டறியப்பட்டது. தற்சமயம் வரை நோயாளிக்கு நெருங்கிய தொடர்புகளில் வேறு எந்த நோய்த்தொற்று நபர்களும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவரின் உடன் நிலை நன்றாவுள்ளதாகவும், வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட தயாராகவுள்ளதாகவும் கூறப்படுப்படுகிறது.

H10N3 வைரஸின் மரபணுவைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வு, அது காட்டுப் பறவைகள் மற்றும் கோழிகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் மனிதர்களை அது பெருமளவில் பாதிக்காது என்றும் வெளிப்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments