Advertisement

Responsive Advertisement

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கவனம் செலுத்துகிறது ராஜபக்ச அரசாங்கம்


யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையத்தின் தரத்திற்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் மீண்டும் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூ .300 மில்லியன் உதவிக்கு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது.

அமைச்சரவை துணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்

Post a Comment

0 Comments