க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பாக தீர்மானிக்கும் கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பாக தீர்மானிக்கும் கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்து்ள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் முதலானோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டது. <b>செயன்முறைப் பரீட்சைகளை நடாத்துவதில்லை என கடந்த வருட இறுதியில் அறிவிக்கப்பட்டு, பின்னர் நடாத்துவது என அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலமையின் கீழ் பிரயோகப் பரீட்சைகளை பிராந்திய ரீதியாக நடாத்துவதில் பாரிய சவால்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் பிரயோகப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளது. எனவே, நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இது தொடர்பான இறுதியான தீர்மானம் எட்டப்படலாம் என எதிர்பார்க்க முடியும்.
0 Comments