Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஏழாவது கர்ப்பிணிப் பெண் மரணம்!

 


கொரோனா காரணமாக மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த 7 ஆவது கர்ப்பிணி பெண் இவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் நேற்று (01) கலுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே உயிரிழந்ததாக டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

இதற்கிடையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அவர்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தாய் மற்றும் குழந்தை நல இயக்குநர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments