Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இரத்ததான நிகழ்வு...!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வைத்தியசாலைகளிலுள்ள இரத்த வங்கிகளில் ததற்போது குருத்தித் தட்டுப்பாடு நிலவி வருவதனையிட்டு பலரும் குருதி நன்கொடைகளை வழங்கிவருவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் அவரது தாயார் மரணித்து ஒருவருட நினைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வொன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் சனிக்கிழமை(12) இடம்பெற்றது.

இதன்போது 50 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்து கொண்டு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

Post a Comment

0 Comments