இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான அர்ஜூன ஒபேசேகரவை உயர்நீதிமன்ற நீதியராக நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சிசிர டி ஆப்ரூ ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அர்ஜூன ஒபேசேகரவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும், உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது
0 Comments