Home » » கோமா நிலையில் இருந்தாரா அமைச்சர் சரத் வீரசேகர? ர

கோமா நிலையில் இருந்தாரா அமைச்சர் சரத் வீரசேகர? ர

 




அரசாங்கத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முதலில் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். இதில் சிலர் விடுதலைப் புலிகளில் இயங்கியவர்களும் இருக்கின்றனர் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன் நடராஜா பிரதிப்ராஜா என்கின்ற ஒரு நபர் முப்பத்தாறு வயது மதிக்கத்தக்கவர் திருமணம் முடித்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒரு அங்கத்தவர். அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முகநூலில் ஒரு படம் பதிவு செய்யப்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உண்மையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களது கட்சியில் இருக்கின்றனர். சிலர் விடுதலைப் புலி இயக்கத்தில் இயங்கியவர்களும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு முதலாவதாக புனர்வாழ்வு அளியுங்கள். பிரதீபன் போன்ற ஒரு சாதாரண மனிதனை பிடித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

கடந்த மாதங்களில் பொலிசாரின் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது. முதலாவது நபர் வெலிகமை சேர்ந்த சுஜித் இந்திரஜித் என்பவர் இரண்டாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த விதுஷன் சந்திரன் என்ற நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாணந்துறையில் அலிகான் என்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் மூவருமே பொலிசாரின் தாக்குதலில் தான் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நிறைய பேச முடியும். வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். பொலிசாருக்கு உரித்தான அமைச்சரான சரத் வீரசேகர அமைச்சர் அவர்கள். ஒரு நீதியான விசாரணை நடத்த வேண்டும்.

காரணம் அவர்கள் அனைவரும் பொலிசாரினால் தான் மரணமடைந்துள்ளனர். சில நேரங்களில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்ற கருத்துகளை பார்க்கின்றபோது கோமா நிலையில் இருந்தாரோ தெரியாது என்று ஒரு கேள்வி எழுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |