Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முடிவு

 


மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரட்ணம் இளங்கோவன் தெரிவித்தார் 


மட்டக்களப்பில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய காவலில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதையடுத்து உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரெட்ணம் இளங்கோவன் தலைமயின் கீழ்  இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக  
விசேட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார் .

Post a Comment

0 Comments