Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- தவான் கப்டானாக நியமனம்...!!

 


இலங்கைக்கு எதிராக இந்திய அணி ஆட இருக்கும் ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான அணி பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் நடக்கின்றது. ஜூலை 13ம் திகதி ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளனர். ஜூலை 25ம் திகதி கடைசி டி 20 போட்டி நடக்க உள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடக்க உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் நடக்க உள்ள இந்த தொடருக்கு இந்திய அணி புதிய வீரர்களை அனுப்புகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியில் ஆட உள்ளனர். இதனால் இந்திய அணி புதிய இளம் வீரர்களை தேர்வு செய்து இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

கோலி, ரோஹித், ரஹானே எல்லோரும் இங்கிலாந்தில் உள்ளதால், இலங்கை செல்லும் இந்திய அணிக்கு தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் இடம்பெறாமல் போய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூன்று வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வரும் இந்தியா அணி கடைசியாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிடாஹாஸ் கிண்ண போட்டிக்காக இலங்கை வந்திருந்தமை குறிப்பிடதக்கது.  

இந்திய அணியில் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, தேவதத் பாடிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணிக்கு இரண்டு முறை வாய்ப்பு பெற்று பிட்னஸ், காயம் காரணமாக வாய்ப்பை இழந்தவர், இந்த முறை மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments