Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்து கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும்? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்


இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் மிக ஆழமாக அவதானித்த பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம்.

இந்நிலையில், இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments