Advertisement

Responsive Advertisement

நாடாளுமன்றத்தில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம்! சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் பதிலடி

 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய சுமந்திரன், ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதேபோன்று, நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார். அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும் நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

Post a Comment

0 Comments