Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பேருந்து கட்டணம் அதிகரித்தல் தொடர்பில் வெளியாகிய தகவல்...!!

 


எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு ரூபாயினாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


மாறாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பயணத் தடை காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட போது, பேருந்து கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments