Home » » பயணக்கட்டுப்பாடு தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்...!!

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்...!!

 


இன்று இரவு முதல் மீண்டும் நாடு தழுவிய போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவை இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, பொது மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு தழுவிய ரீதியில் இன்று இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 4 மணிவரையில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லை பகுதிகளை இலக்கு வைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும். அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். மேலும் பொது போக்குவரத்து சேவைகள் இயங்காது, வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டாது.

இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொசன் போயா விடுமுறை தினமான நாளைய தினம் மதவழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபடமுடியும்.

இதன்போது மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |