Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவங்கேணியில் காதலர்கள் நஞ்சு விதையுண்டு மரணம்!

 


ஷமி மண்டூர்)

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அந்தோனியார் வீதி , களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த காதலர்களான நாகராசா திரிஷாளினி (16 வயது) மற்றும் அரியராசா விஜயதனுஷன் (19 வயது ) ஆகிய இருவரும் தங்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுத்ததால் இருவரும் நஞ்சு விதை உண்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று (15) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது குறித்த இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வீட்டாரின் அனுமதியின்றி காதலித்து வந்த நிலையில் இருவரினது வீட்டார் அவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் சம்பவ தினமான நேற்று (15) அவர்களின் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரினதும் வீட்டார் தேடிச்சென்ற போது இருவரும் நஞ்சு விதை உண்ட நிலையில் மயக்கமுற்று இருந்தாகவும் பின்னர் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போது குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யுவதி உயரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எச்.எம்.ஹக்கீம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments