Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து ஆளும் தரப்புக்குள் வெடித்தது சர்ச்சை - கம்மன்பிலவை பதவி விலக வலியுறுத்து

 


எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்கான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கம்ன்பில உடன் பதவி விலக வேண்டுமெனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் பிரதானிகளை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தும் நோக்குடன் அமைச்சர் உதய கம்மன்பில செயற்பட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments